அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்றார் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம்

0 834
அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்றார் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் 27 வயதான ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிச் சுற்றில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீமும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரேவும் மோதினர்.

நான்கு மணி நேரம் நடைபெற்ற விறுவிறுப்பான இப்போட்டியின் முதல் நான்கு செட்களில் இருவரும் தலா 2 செட்களை வென்ற நிலையில், ஐந்தாவது செட்டிலும் டையில் முடிந்ததால் யாருக்கு வெற்றி என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இறுதியில் 2-6, 4-6, 6-4, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் ஸ்வேரேவை வீழ்த்தி தீம் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். ஒற்றையர் பிரிவில் அவர் வெல்லும் முதலாவது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments