நீட் தேர்வுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க முன்வர வேண்டும் - நடிகர் சூர்யா

நீட் தேர்வுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க முன்வர வேண்டும் - நடிகர் சூர்யா
நீட் தேர்வுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து, குரல் கொடுக்க முன்வருமாறு, தமிழக மக்களுக்கு திரைப்பட நடிகர் சூர்யா அழைப்பு விடுத்துள்ளார்.
நீட் தேர்வு அச்சத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுக்கு, அறிக்கை ஒன்றில் வேதனை தெரிவித்துள்ள அவர், இது சாதாரண குடும்பத்து குழந்தைகளின் மருத்துவர் கனவில், தீ வைக்கும் தேர்வு என குறிப்பிட்டுள்ளார்.
அநீதியான தேர்வு முறை என விமர்சித்துள்ள சூர்யா, இது மனு நீதி தேர்வு என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
அப்பாவி மாணவர்களின் மரணங்களை இனியும் நாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என நடிகர் சூர்யா கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments