பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

0 1284
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது.

கொரோனா காரணமாக, தனிநபர் இடைவெளியை பின்பற்ற ஏதுவாக, சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டத் தொடரை தற்காலிகமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1000 பேர் அமரக்கூடிய கலைவாணர் அரங்கின் இரண்டாவது தளத்தில் இடைவெளிவிட்டு இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தற்காலிக அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு பேரவை கூடியதும், பிரணாப் முகர்ஜி, ஜெ.அன்பழகன் உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
துணை நிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நாளை தாக்கல் செய்கிறார். நாளைமறுநாள் நடைபெறும் கூட்டத்தில் கேள்வி நேரம் இடம்பெற உள்ளது.

கொரோனா விவகாரம், புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, கிசான் திட்டத்தில் முறைகேடு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பவும், கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

கொரோனா காரணமாக கொரோனா சோதனை செய்து நெகட்டிவ் ஆனவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கபடுகின்றனர்.கிருமி நாசினி கொண்டு சுத்திகரிப்பு செய்து வருகின்றனர்.

சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுவதையொட்டி, 1500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கலைவாணர் அரங்கை சுற்றியுள்ள சாலைகளில் சிசிடிவி காட்சிகளை கண்காணித்து வருவதுடன், ரோந்துப் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் 10 ஆண்டுகளுக்கு பின்னர் மாற்று இடத்தில் நடத்தப்படவுள்ளது. கலைவாணர் அரங்கில் 1952 க்கு பிறகு இரண்டாவது முறையாக கூட்டம் நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments