எதிர்க்கட்சிகள் எழுப்பும் எந்த பிரச்சனையைப் பற்றியும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயார் - பிரகலாத் ஜோஷி

0 933
எதிர்க்கட்சிகள் எழுப்பும் எந்த பிரச்சனையைப் பற்றியும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் எழுப்பும் எந்த பிரச்சனையைப் பற்றியும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

நாளை துவங்க உள்ள மழைக்கால கூட்டத்தொடரில், லடாக் எல்லைப் பிரச்சனை, கொரோனா கட்டுப்பாட்டு நிலவரம், கடந்த காலங்களில் அரசு பிறப்பித்த அவசரச் சட்டங்கள் ஆகியன குறித்து விவாதிக்க வேண்டும் என அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இதற்கு பதிலளித்துள்ள பிரகலாத் ஜோஷி, இந்த நெருக்கடியான நேரத்தில், கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இந்திய-சீன எல்லை பிரச்சனை குறித்து, இரண்டு அவைகளின் கட்சித் தலைவர்கள் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments