கொரோனா குணமானோர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியீடு

0 1010
கொரோனா குணமானோர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியீடு

கொரோனா பாதிப்பு குணமானோர் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க சயவனப்பிராஷ், மஞ்சள் தூள் கலந்த பால், அஸ்வகந்தா, பெருநெல்லி ஆகியவற்றை உட்கொள்ளலாம் என மத்திய நலவாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று குணமானோருக்கு உடல்வலி, இருமல், தொண்டைவலி, மூச்சுவிடுவதில் சிக்கல் ஆகிய தொல்லைகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இதனால் கொரோனா குணமானபிறகு தேவையான அளவு வெந்நீர் குடிக்க வேண்டும் என்றும், நோய் எதிர்ப்பாற்றலை உண்டாக்கும் ஆயுர்வேத, சித்த மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அஸ்வகந்தா பொடியை ஒரு நாளைக்கு இருமுறை 15 நாட்களுக்கு உட்கொள்ளலாம் என்றும், நாள்தோறும் ஒரு பெருநெல்லிக்காயைத் தின்னலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கொதிக்க வைத்த பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிக்கலாம் என்றும், நாள்தோறும் காலையில் ஒரு தேக்கரண்டி சயவனப்பிராஷ் மருந்தை உட்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments