15 ஆண்டுகளில் பீகார் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது - பிரதமர் மோடி

0 1014
சரியான அரசு, அது எடுத்த தீர்மானங்கள் மற்றும் கொள்கை முடிவுகளால், பீகார் கடந்த 15 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சரியான அரசு, அது எடுத்த தீர்மானங்கள் மற்றும் கொள்கை முடிவுகளால், பீகார் கடந்த 15 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பீகாரில் 3 பெட்ரோலியத் திட்டங்களை காணொலி வழியாக துவக்கி வைத்து மோடி பேசினார். அப்போது, அனைத்து துறைகளிலும் பீகாரின் வளர்ச்சிக்காக தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.

பீகாரில் மக்கள் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பீகாரின் கிழக்கு சம்பரான் மற்றும் பங்கா மாவட்டங்களில் முறையே 136.4 கோடி மற்றும் 131.75 கோடி ரூபாய் மதிப்பிலான எரிவாயு சிலிண்டர் நிரப்பும் ஆலைகளை மோடி திறந்து வைத்தார்.

இந்த இரண்டு ஆலைகளிலும் தினசரி 80 லட்சம் சிலிண்டர்கள் நிரப்பும் வசதி உள்ளது. பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இந்த ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதே போன்று 193 கிலோ மீட்டர் நீளமுள்ள துர்காபூர்-பங்கா இயற்கை எரிவாயு குழாயையும் பிரதமர் காணொலியில் திறந்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments