மைசூரு தசரா விழாவில் பங்கேற்கும் 5 யானைகளுக்கும் அதன் பாகன்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு

0 624
மைசூரு தசரா விழாவில் பங்கேற்கும் 5 யானைகளுக்கும் அதன் பாகன்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு

கர்நாடக மாநிலம் மைசூருவில் அடுத்தமாதம் நடைபெறவுள்ள தசராவில் பங்கேற்கும் 5 யானைகளுக்கும், அதன் பாகன்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவை கொரோனா பரவல் காரணமாக  அக்டோபர் 17 முதல் 26 வரை எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.   

வழக்கமாக   5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெறும் ஜம்பு சவாரி ஊர்வலத்தை அரண்மனை வளாகத்திலேயே  நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊர்வலத்துக்காக   கோபி, விஜயா, விக்ரம், காவேரி, அபிமன்யு ஆகிய 5 யானைகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை  இறுதி செய்து அரசு அனுமதிக்கு அதிகாரிகள் அனுப்பிவைத்துள்ளனர்.

அரசு அனுமதி கிடைத்ததும் 5 யானைகளும் சம்பிரதாய முறைப்படி மைசூரு அரண்மனைக்கு அழைத்துவரப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments