அமெரிக்காவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி 11 கார்கள் மீது மோதி விபத்து

0 895
அமெரிக்காவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி 11 கார்கள் மீது மோதி விபத்து

அமெரிக்காவில் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 11 வாகனங்கள் மீது மோதி ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

கலிபோர்னியாவில் சாக்ரமென்டோ நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது, வேகமாக வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டினை இழந்தது.

மேலும் அதன் பிரேக்கை கட்டுப்படுத்த முடியாததால் அடுத்தடுத்து சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது அந்த லாரி மோதியது.

இந்த விபத்தில் 39 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்தார். விபத்து குறித்து அறிந்த காவல்துறை அதிகாரிகள் லாரி ஓட்டுநரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments