நேரடி படிப்பு , தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கு இறுதி பருவத் தேர்வு செப். 21 முதல் 30 வரை ஆன்லைன் மூலமாக நடக்கும் என அறிவிப்பு

0 21558
நேரடி படிப்பு மற்றும் தொலைதூரக் கல்வி இறுதி ஆண்டுக்கான இறுதி பருவ மாணவர்களுக்கு செப்டம்பர் 21 முதல் 30 ஆம் தேதி வரை இணைய வழி மூலமாக தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதற்கான தேர்வு அட்டவணையை தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி செல்வநாராயணன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பதிவாளர் ஞானதேவன் விடுத்துள்ள அறிக்கையில், மேலும் பல விபரங்கள் www.annamalaiuniversity.ac.in மற்றும் அந்தந்த துறைகள் மூலம் தெரியப்படுத்தபட உள்ளதாகக் கூறினார்.

மேலும் இணையவழி தேர்வு தொடர்பாக மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய அந்தந்த துறை தலைவர்களை தொடர்பு கொள்ளலாம் என்றும், மாணவர்களின் நலன் கருதி “மாதிரி தேர்வு”  இணையதளம் வழியாக அடுத்த வாரத்தில் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments