பிரதமர் மோடி இன்று காணொலி மூலமாக எரிவாயு விநியோக திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

0 1593

பீகார் மாநிலத்தில் எல்.பி.ஜி.,குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கும் திட்டம் மற்றும் பாட்டில் ஆலைகளை பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கிவைக்கிறார். இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் துர்காபூரில் எல்.பி.ஜிஆலை மற்றும் பங்க்காவில் உள்ள எல்.பி.ஜி.,பாட்டிலிங் ஆலை உள்ளிட்ட மூன்று ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. இதனை பிரதமர் மோடி நாட்டிற்கு இன்று அர்ப்பணிக்கிறார். இந்த விழாவில் மாநில பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநில மக்களுக்கு உதவிடும் வகையில் 131 கோடி ரூபாய் செலவில் எரிவாயு நிரப்பும் ஆலை கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 40 ஆயிரம் சிலிண்டர்களை கையாளமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments