நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவன் தற்கொலை

0 5421
நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவன் தற்கொலை

தருமபுரி அருகே மாணவர் ஆதித்யா என்பவர், நீட் தேர்வு அச்சதால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தருமபுரியிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கியம்பட்டியைச் சேர்ந்தவர்கள் மணிவண்ணன் - ஜெயசித்ரா. இவர்களின் ஒரே மகன் ஆதித்யா.

கடந்த 2 ஆண்டுகளாக, நீட் தேர்வு பயிற்சி மேற்கொண்டு வந்ததுள்ளார். இந்நிலையில், நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், வீட்டின் மாடியில் உள்ள அறையில், பகல் உணவுக்குப் பின், தேர்வுக்கு, ஆதித்யா தயாராகி வந்துள்ளார்.

மாலை 6.30 மணியளவில், அவரது குடும்பத்தினர், சென்று பார்த்தபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தருமபுரி நகர காவல்துறையினர், ஆதித்யாவின் உடலைக் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments