கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு ஆட்களை தேர்வு செய்யக்கூடாது-மத்திய அரசு

0 2410

தடுப்பூசி பரிசோதனைக்கு ஆட்களை தேர்வு செய்யக்கூடாது என்று சீரம் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியாவைச் சேர்ந்த சீரம் நிறுவனம்  பரிசோதித்து வருகிறது.சமீபத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனையில் ஒருவருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதையடுத்து தடுப்பூசி சோதனை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனையை மத்திய அரசிடம் கேட்காமல் மீண்டும் தொடங்கக் கூடாது என்றும்,அடுத்த கட்ட பரிசோதனைக்கு தன்னார்வலர்களை தேர்வு செய்வதையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று சீரம் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments