நிலவில் உள்ள கனிமங்களை எடுத்து வர நாசா திட்டம்

0 1373
நிலவில் உள்ள கனிமங்களை எடுத்து வர அமெரிக்காவின் நாசா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நிலவில் உள்ள கனிமங்களை எடுத்து வர அமெரிக்காவின் நாசா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

விண்வெளி வளங்களுக்கான புதிய சந்தையை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா களமிறங்கி இருக்கிறது. இதன்படி 2024 ஆண்டுக்கு முன் சந்திரனில் உள்ள கனிமங்களை கொண்டுவர வேண்டுமென நாசா கூறியுள்ளது.இதன்படி
சந்திர மேற்பரப்பில் உள்ள கனிமங்களை அல்லது பாறைகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வரவேண்டும்.

பின்னர் அவற்றை நாசாவுக்கு கொடுக்க வேண்டும், இதன் பின்னர் அந்த பொருள் நாசாவின் சொத்தாக மாறும்.இந்த திட்டத்தின் படி முன்தொகையாக 10 சதவிகிதமும், திட்டம் செயல்பட தொடங்கியதும் 10 சதவிகிதமும் கொடுக்கப்படும் என்றும், கனிமங்களை கொண்டு வந்து கொடுத்தபின்னர் 80 சதவிகித தொகை கொடுக்கப்படும் என்றும் நாசா அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments