வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான பதிவுகளை நீக்காதது தொடர்பான புகார்-பேஸ்புக் நிறுவன அதிகாரிகளுக்கு சம்மன்

0 537
வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான பதிவுகளை நீக்காதது தொடர்பான புகாரில், பேஸ்புக் நிறுவன அதிகாரிகளுக்கு டெல்லி சட்டமன்ற குழுவினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான பதிவுகளை நீக்காதது தொடர்பான புகாரில், பேஸ்புக் நிறுவன அதிகாரிகளுக்கு டெல்லி சட்டமன்ற குழுவினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான பதிவுகளை நீக்கும் தனது விதிமுறைகளை, பேஸ்புக் நிறுவனம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு முறையாக கடைபிடிக்கவில்லை எனப் புகார் எழுந்தது. இதுதொடர்பான கட்டுரை வால் ஸ்டிரீட் ஜர்னல் இதழில் வெளியானதை தொடர்ந்து, தெலங்கானாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவரை பேஸ்புக் தடை செய்தது.

இதனிடையே இந்த புகார் குறித்து விசாரித்து வரும் டெல்லி சட்டமன்ற குழுவினர், வரும் 15ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு பேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் துணை தலைவரும், நிர்வாக இயக்குநருமான அஜித் மோகனுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments