நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியீடா?

0 19494
நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், அதற்கு விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், அதற்கு விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதமே படத்தை வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் தற்போது வரை மாஸ்டர் படத்தை வெளியிட முடியவில்லை. இந்த நிலையில் மாஸ்டர் படத்தை வெளியிட அமேசான் நிறுவனத்துடன் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஆனால், மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட விநியோகஸ்தர்களிடம் தயாரிப்பு நிறுவனம் முன் பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட வேண்டும் என்றால், விநியோகஸ்தர்களிடம் பெற்ற முன் பணத்தை வட்டியும் முதலுமாக செட்டில் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments