நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது - மு.க.ஸ்டாலின்

0 1774
நீட் தேர்வு அச்சம் காரணமாக மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நீட் தேர்வு அச்சம் காரணமாக மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து முகநூலில் பதிவிட்டுள்ள அவர், "எல்லோருமே என்கிட்ட ரொம்ப எதிர்பார்த்தீங்க; ஆனா எனக்குத்தான் பயமா இருக்கு" என்று மாணவி ஜோதிஸ்ரீ துர்கா பேசிய ஆடியோ, நீட் தேர்வின் கோர முகத்தைக் காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒரு தேர்வு, மாணவ சமுதாயத்தின் மனங்களை நிலைகுலைய வைப்பதாக இருப்பதை, அனிதா முதல் ஜோதிஸ்ரீ துர்கா மரணம் வரை உணர்த்துவதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தற்கொலை என்பது தீர்வல்ல என்று மீண்டும் சொல்வதாகவும், நீட் என்பது ஒரு தேர்வே அல்ல என்பதை, மீண்டும் மீண்டும் சொல்வதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments