ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் அக்.5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்

0 335
ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் அக்.5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்

செப்டம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், அடுத்த மாதம் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, 42வது கவுன்சில் கூட்டம், வரும் 19ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திங்கட்கிழமை தொடங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடர், அக்டோபர் மாதம் முதல்வாரம் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, இம்மாதத்திற்கான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநில அரசுகளுக்கு சுமார் 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை மத்திய அரசு வழங்க வேண்டியுள்ளது குறிப்பிடத்தகக்து.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments