மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்திலேயே பெண் தொண்டர் தூக்கு... தற்கொலை கடிதத்தால் பரபரப்பு

0 6191

சக கட்சித் தலைவர்கள் டார்ச்சர் செய்ததால், மார்க்ஸிஸ்ட் கட்சி பெண் தொண்டர் ஒருவர் கட்சி அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளது கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டம் பாரசாலா அருகேயுள்ள உதயங்குளக்காரா பகுதியை சேர்ந்த ஸ்ரீகுமார் என்பவரின் மனைவி ஆஷா (வயது 41). கடந்த வியாழக்கிழமை கட்சி அலுவலகம் செல்வதாக கூறி விட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார். ஆனால் , பிறகு வீடு திரும்பவே இல்லை. இதைத் தொடர்ந்து, உறவினர்கள் கட்சி அலுவலகம் சென்று பார்த்த போது, கட்சி அலுவலக கட்டத்துக்குள் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.

தற்கொலைக்கு முன் அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில் , உள்ளுர் தலைவர்கள் ராஜன், ஜாய் ஆகியோர் என்னை தொடர்ந்து டார்ச்சர் செய்து வருகின்றனர். மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன். என்னை டார்ச்சர் செய்வது குறித்து கட்சியின் மேல்மட்டத் தலைவர்களுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, ஆஷாவின் உடலை இறக்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு, காவல்துறையினர் சமாதானப்படுத்தி சடலத்தை மீட்டு திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்துக்கு கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார், ரமேஷ் சென்னிதாலா கூறுகையில், '' நேர்மையான டி.ஜி.பி ஒருவரை வைத்து இந்த வழக்கை விசாரித்து உண்மைத் தன்மையை வெளிக் கொண்டு வர வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சிக்குள் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி பெண் தொண்டர்கள் குறி வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். தற்கொலை செய்து கொண்ட பெண் தன் நிலை குறித்து மேல் மட்டத் தலைவர்களுக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கட்சி அலுவலகத்திலேயே மார்க்சிஸ்ட் கட்சியின் பெண் தொண்டர் தற்கொலை செய்து கொண்டிருப்பது கேரளாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments