தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள அமைச்சர் பதவி விலகக் கோரி நடந்த வன்முறையால் போலீசார் தடியடி

0 845
தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள அமைச்சர் பதவி விலகக் கோரி நடந்த வன்முறையால் போலீசார் தடியடி

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைச்சரை பதவி விலக வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததால், போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி. ஜலீலுக்கு தங்கக் கடத்தல் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகவும், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும், பாஜக மற்றும் இளைஞர் காங்கிரசார் தலைமைச் செயலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் அறிவுறுத்தலையும் மீறி, தடுப்புகளை தகர்த்து போராட்டக்காரர்கள் தலைமைச் செயலகத்தில் நுழைய முயன்றனர்.

இதனால் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை கலைக்க முயன்றபோது, போலீசாருடன் தள்ளு முள்ளுவில் ஈடுபட்டதால், போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரகளை கலைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments