மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து

0 7202

கொரோனா பரவல் முடிவுக்கு வந்த பிறகே, மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து துவக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து, மாவட்டந்தோறும் ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டார்.

இந்த ஆய்வுக்கு பின்னர் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  பொது மக்களின் நலன் கருதி, பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

மாநிலங்களுக்கு இடையே யான பேருந்து போக்குவரத்து எப்போது துவக்கப்படும் ? என செய்தி யாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதில் அளித்த அவர், இப்போதைக்கு சாத்தியமில்லை என்றார்.  

முன்னதாக , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இரு மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண் டனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழலிலும், பாதிப்பு, படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவித்தார்.

பொது மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் தான்கொரோனா கட்டுக்குள் வந்து, இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவு பெற்ற திட்டங்களை துவக்கி வைத்த அவர், புதிய கட்டிடங்களையும் திறந்து வைத்தார். சுமார் 22 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments