தமிழ்நாட்டில் இன்று 5519 பேருக்கு கொரோனா உறுதி.. 77 பேர் உயிரிழப்பு..!

0 2842
தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 519 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 91 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 519 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 91 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் 77 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 8 ஆயிரத்து 231 ஆக உயர்ந்தது. நோய் தொற்றில் இருந்து சுமார் 6 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 85 ஆயிரம் மாதிரிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. சென்னையில் புதிதாக 987  பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. கோவையில் மேலும் 394 பேருக்கும், திருவள்ளூரில் 312 பேருக்கும், செங்கல் பட்டில் 297 பேருக்கும்,கடலூரில் 289 பேருக்கும்,  வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments