மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு மனோஜ் ஜா போட்டி

0 2197

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான ராஷ்டிரிய ஜனதா தளம் எம்பி மனோஜ் ஜா வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற மழைக்காலகூட்டத் தொடரின் முதல் நாளில், மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே பதவி வகித்த ஹரிவன்ஷின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இதற்கான வேட்பு மனு தாக்கல் 7ம் தேதி தொடங்கியது. மாநிலங்களவை துணைத்தலைவர் பதவிக்கு ஐக்கிய ஜனதா தளம் எம்பியான ஹரிவன்ஷ், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் ராஷ்டிரிய ஜனதா தளம் எம்பி மனோஜ் ஜா நிறுத்தப்பட்டுள்ளார். அவர் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அவருக்கு 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments