ரவுடி சங்கரின் உடலில் 12 இடங்களில் காயங்கள்-பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

0 1192

சென்னை அயனாவரத்தில் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி சங்கரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த 3 தடயங்கள் தவிர்த்து, 12 இடங்களில் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது தாக்கியதால் என்கவுன்டரில் சங்கர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஆய்வாளர் நடராஜன் உள்ளிட்ட போலீசார் திட்டமிட்டு தாக்கி கொலை செய்துவிட்டு என்கவுன்டர் நாடகமாடுவதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த வழக்கு விசாரணை, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் ரவுடி சங்கரின் கை, கால்கள் ஆகியவற்றில் 12 இடங்களில் காயங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments