கிரிக்கெட் வாரிய ஆண்டுப் பொதுக்கூட்டம் செப்டம்பர் 30க்குள் நடைபெறாது - ஜெய் ஷா

0 952

கொரோனா சூழலால் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் நடைபெறாது என அதன் செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டப்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளின் படி கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் நடத்த வேண்டும். கொரோனா சூழலால் இந்தக் கூட்டத்தை நடத்த மேலும் 3 மாதங்கள் காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனைத்து மாநிலக் கிரிக்கெட் சங்கங்களுக்கும் இந்தியக் கிரிக்கெட் வாரியச் செயலாளர் ஜெய் ஷா எழுதியுள்ள கடிதத்தில், ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் நடைபெறாது என்றும், கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments