காட்டுத் தீயால் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையோர மாநிலங்களில் 8 பேர் உயிரிழப்பு

0 679
அமெரிக்காவின் மேற்கு கடற்கரை மாநிலங்களில் காட்டுத்தீ காரணமாக 8 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் மேற்கு கடற்கரை மாநிலங்களில் காட்டுத்தீ காரணமாக 8 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓரிகான் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சுமார் 9 லட்சம் ஏக்கர் எரிந்து நாசமான நிலையில், 40 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக ஆளுநர் கேட் பிரவுன் தெரிவித்துள்ளார். கடலோரம் அமைந்துள்ள காடுகளில் இருந்து தீப்பரவியதில் ஏராளமான குடியிருப்புகள், வாகனங்கள் எரிந்து சாம்பலாயின.

இதே போல் வாஷிங்டன் மாநிலத்தின் கிழக்குப்பகுதியில் உள்ள விவசாய நகரமான மால்டனிலும் காட்டுத் தீயால் பெரும் பகுதி சேதமடைந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments