கிரீஸ் நாட்டில் 2வது நாளாக திறந்த வெளியில் இரவை கழிக்கும் புலம்பெயர்ந்தோர்

0 933
கிரீஸ் நாட்டில் 2வது நாளாக திறந்த வெளியில் இரவை கழிக்கும் புலம்பெயர்ந்தோர்

கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் தீவில் முகாம் தீவிபத்துக்குள்ளானதை அடுத்து நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் 2வது நாளாக திறந்தவெளியில் இரவு பொழுதை கழித்தனர்.

கொரோனா பரவலால் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த மோரியா முகாமில் 2 நாட்களுக்கு முன்பு தீவிபத்து ஏற்பட்டது.

இதில் கூடாரங்கள் எரிந்து நாசமான நிலையில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் வாகன நிறுத்துமிடங்கள், ஆலிவ் தோப்புகள் உள்ளிட்ட இடங்களில் தங்கி வருகின்றனர்.

குழந்தைகள், பெண்கள் என சிலரை மட்டும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்ட நிலையில், மீதி உள்ளவர்களுக்கு இருப்பிடங்களை தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கொரோனா பரவல் ஏற்படுவதை தடுக்க 19 ஆயிரம் சோதனை கருவிகளை தீவுக்கு அனுப்பி உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments