மேற்கு வங்காளத்தில் இருந்து கொரோனா சென்று விட்டது - பாஜக தலைவர்

0 1529
மேற்கு வங்கத்தில் நெரிசல் மிகுந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றதுடன், மாநிலத்தை விட்டு கொரோனா சென்று விட்டதாக பாஜக மாநில தலைவர் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்கத்தில் நெரிசல் மிகுந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றதுடன், மாநிலத்தை விட்டு கொரோனா சென்று விட்டதாக பாஜக மாநில தலைவர் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அம்மாநிலத்தில் கொரோனா தொற்றால் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நோய் பரவல் குறித்த அச்சமின்றி தனியாகலியில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதில் உரையாற்றிய மாநிலத் தலைவர் திலீப் கோஷ், அடுத்த ஆண்டு தேர்தல்களுக்கான பாஜக பேரணிகளைத் தடுக்கும் ஒரே நோக்கில் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உள்ளது என முதலமைச்சர் மம்தா பானர்ஜி நடிப்பதாக விமர்சித்தார். அதன் பொருட்டே ஊரடங்கு கட்டுப்பாடுகளை மக்களிடையே திணிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments