இந்தியாவில் மே மாதத்தில் 64 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்திருக்கலாம் என ஆய்வில் தகவல்

0 1821
இந்தியாவில் மே மாதத்தில் 64 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்திருக்கலாம் என மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் செய்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் மே மாதத்தில் 64 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்திருக்கலாம் என மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் செய்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் மே 11 முதல் ஜூன் 4 வரை 21 மாநிலங்களில் 28 ஆயிரம் பேரிடம் ரத்த மாதிரிகளைச் சேகரித்து சோதனை செய்தது. இந்தச் சோதனை முடிவுகளில் வயது வந்தோரில் பூச்சியம் புள்ளி ஏழு மூன்று விழுக்காட்டினருக்கு கொரோனா உள்ளது கண்டறியப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

அந்த ஆய்வின்படி பார்த்தால் மே மாதத்தில் நாட்டில் 64 லட்சத்து 68 ஆயிரத்து 388 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்திருக்கக் கூடும். தொற்று உறுதி செய்யப்பட்டவர் ஒருவர் என்றால், 82 முதல் 130 பேர் வரை வரை தொற்று கண்டறியப்படாமல் விடப்பட்டிருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments