மராத்தா இட ஒதுக்கீடு - உச்ச நீதிமன்றம் கருத்து..!

0 483
மக்களின் சமூக, கல்வி, பொருளாதார நிலைகளில் பின்தங்கி இருப்பதைக் காரணங்காட்டி இட ஒதுக்கீட்டு உச்சவரம்பை 50 விழுக்காட்டுக்கு மேல் அதிகரிப்பதை நியாயப்படுத்த முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மக்களின் சமூக, கல்வி, பொருளாதார நிலைகளில் பின்தங்கி இருப்பதைக் காரணங்காட்டி இட ஒதுக்கீட்டு உச்சவரம்பை 50 விழுக்காட்டுக்கு மேல் அதிகரிப்பதை நியாயப்படுத்த முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் மராத்தா இனத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்கி மாநில அரசு இயற்றிய சட்டம் செல்லும் என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, ரவீந்திர பட் அமர்வு மராத்தா இட ஒதுக்கீட்டுச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது.

அப்போது, சமூக, கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றில் பின்தங்கிய நிலையையும், அரசு பணிகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாதததையும் இடஒதுக்கீட்டு உச்சவரம்பை 50 விழுக்காட்டுக்கு மேல் அதிகரிப்பதற்கு ஒரு காரணமாகக் காட்ட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். அசாதாரணச் சூழலில் தான் 50 விழுக்காடு உச்சவரம்பைத் தளர்த்த முடியும் எனக் குறிப்பிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments