காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு

0 2839
காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகத்தில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் தமிழக எல்லையான பிலிக்குண்டுலுக்கு நேற்றுப் பத்தாயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 12 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து பத்தாயிரத்து 45 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 91 புள்ளி 8 அடியாகவும், நீர் இருப்பு 54 புள்ளி 8 டிஎம்சி ஆகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்குக் காவிரி ஆற்றில் ஆறாயிரம் கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய்களில் 700 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments