வடிவேல் பாலாஜி உடலுக்கு விஜய் சேதுபதி நேரில் மரியாதை

0 20555
வடிவேல் பாலாஜி உடலுக்கு விஜய் சேதுபதி நேரில் மரியாதை

மறைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

உடல்நலக்குறைவால் காலமான நடிகர் வடிவேல் பாலாஜியின் உடல், சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் வடிவேல் பாலாஜியின் குடும்பத்தினருக்கு விஜய்சேதுபதி நிதியுதவி வழங்கினார்.

 காமெடி நடிகர் ரோபோ சங்கர், வடிவேல் பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் நடிகை ஆர்த்தி, நடிகர் ராமர், மிமிக்ரி கலைஞர் சேது ஆகியோரும் நேரில் வந்து இறுதி மரியாதை செலுத்தினர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி ஆகியோரும் வடிவேல் பாலாஜி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து நடிகர் தாடி பாலாஜி, பெப்சி சங்கத்தினர் ஆகியோரும்  மரியாதை செலுத்தினர்.

வடிவேல் பாலாஜியுடன் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகளில் அதிகம் சேர்ந்து நடித்த, நடிகர் புகழ், நேரில் அஞ்சலி செலுத்தியபோது கதறி அழுத காட்சி, அங்கு வந்தோரை நெகிழ செய்தது.

குடும்பத்தினர், நடிகர் நடிகையர், ரசிகர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்திய பிறகு, நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோடு பகுதியிலுள்ள மயானத்துக்கு வடிவேல் பாலாஜியின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்தவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட சுமார் 300 பேர் பங்கேற்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments