கல்லூரி மாணவியுடன் கணவர் ஓட்டம்; அவமானத்தால் மகன்களை கொன்று தாய் தற்கொலை!

0 43910

புதுக்கோட்டையில் கணவர் கல்லூரி மாணவியுடன் ஊரை விட்டு ஓடியதால் , மனைவி இரண்டு மகன்களை கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள வல்லம்பக்காடு என்ற ஊரை சேர்ச்தவர் முத்து(வயது 45). இவரின் மனைவி ராதா(34). இந்த தம்பதிக்கு இவர்களுக்கு அபிஷேக்(13), அபிரித்(9) என இரண்டு மகன்கள் உண்டு. 2 மகன்கள். மூத்த மகன் 8-ம் வகுப்பும், இளைய மகன் 4-ம் வகுப்பும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருந்த தம்பதியின் குடும்ப வாழ்க்கையில் கல்லூரி மாணவி ஒருவரால் புயல் வீச ஆரம்பித்தது. ராஜேந்திரபுரம் என்ற பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் முத்துவுக்கும் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது. இதனால், கணவருடன் ராதா கோபத்தில் சண்டையிட்டுள்ளார். மனைவியின் கண்டிப்பையும் மீறி முத்து அந்த மாணவியுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இந்த நிலையில், முத்து அந்த மாணவியை கூட்டிக் கொண்டு ஊரை விட்டு ஓடி விட்டதாக சொல்லப்படுகிறது.image

இதனால், மாணவியின் பெற்றோர் அறந்தாங்கி காவல்துறையில் புகார் அளித்தனர். கணவர் கல்லூரி மாணவியுடன் ஓடி சம்பவம் ராதாவின் மனதை வெகுவாக பாதித்து விட,  இனிமேல் வாழக்கூடாது என்ற முடிவெடுத்த ராதா, பாசமாக வளர்த்த தன் மகன்களை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். செப்டம்பர்-9 ஆம் தேதி இரவு தன் மகன்கள் இருவருக்கும் உணவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். மகன்கள் நல்ல உறக்கத்தில் இருந்த போது, அவர்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு தன் மீதும் தீ வைத்துக் கொண்டார். இதில், ராதாவும் அப்ரீத்தும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனரி. அபிஷேக் மட்டும் உயிருக்கு போராடி கொண்டிருந்தான்.  சிறுவனை மீட்ட அக்கம்பக்கத்தினர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அபிஷேக்கும் சிறிது நேரத்தில் இறந்து போனார்.

முறை தவறிய காதலால் ஒரு குடும்பமே பரிதாபமாக அழிந்தது துயர சம்பவத்தால் வல்லம்பக்காடு மக்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். கல்லூரி மாணவியுடன் மாயமான முத்துவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments