கொரோனா நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் மருந்து பலனளிக்கிறது - உலக சுகாதார அமைப்பின் தலைவர் தகவல்

0 1565
கொரோனா நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் மருந்து பலனளிக்கிறது - உலக சுகாதார அமைப்பின் தலைவர் தகவல்

கடுமையான மற்றும் மோசமாக பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் மருந்து பலன் தந்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா சிகிச்சைக்காக 180 மருந்துகள் ஆய்வுகளில் உள்ளதாகவும், அவற்றில் 35 மருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவற்றில், நுரையீரல் பாதிப்புக்கு கொடுக்கப்படும் டெக்ஸாமெதாசோன் மருந்து, கொரோனா சிகிச்சைக்கு பலன் அளித்து இருப்பது நிரூபிக்கப்பட்டு உள்ளதாகவும், மற்றவை பலனளிக்கவில்லை எனவும் டெட்ராஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments