அக்டோபரில் விற்பனைக்கு வரும் 'அதிவிரைவு மின்சார மோட்டார்சைக்கிள்'

0 9111
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிவிரைவு மோட்டார் சைக்கிளான KRIDN அக்டோபர் மாதம் முதல் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிவிரைவு மோட்டார் சைக்கிளான KRIDN அக்டோபர் மாதம் முதல் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்தால் இந்தியாவில் தயாரிக்கப்படும் KRIDN இருசக்கர வாகனம் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் உடையது.

டெல்லி, பெங்களூர், சென்னை, ஐதராபாத் ஆகிய நகரங்களில் இந்த வகை இருசக்கர வாகனங்களை முதலில் அறிமுகப்படுத்த ஒன் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக வாகன விற்பனை மையம் அமைப்பதற்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. வாகனங்களை வாங்க முன்பதிவு செய்தவர்களுக்கு முதல்கட்ட விற்பனை அக்டோபரில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் விலை ஒரு லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் ஆகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments