தமிழ்நாட்டில் இன்று 5528 பேருக்கு கொரோனா உறுதி

0 3295
தமிழ்நாட்டில் இன்று 5528 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் 64  பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 8 ஆயிரத்து 154 ஆக உயர்ந்தது. நோய் தொற்றில் இருந்து மேலும் 6 ஆயிரத்து 185 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 85 ஆயிரத்திற்கும் அதிகமான மாதிரிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் புதிதாக 991 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் மேலும் 440 பேருக்கும், திருவள்ளூரில் 296 பேருக்கும், செங்கல் பட்டில் 279 பேருக்கும்,கடலூரில் 263 பேருக்கும்,  வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments