ராமதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் நோட்டீஸ்

0 1541
திமுக தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சமி நிலத்தில் முரசொலி அறக்கட்டளையின் அலுவலகம் அமைந்திருப்பதாக ராமதாஸ் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து அவர் மீது அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ் பாரதி எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முரசொலி அறக்கட்டளை சார்பில் யாரும் ஆஜராகாததால், அவர்கள் தரப்புக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப அறிவுறுத்திய நீதிபதி, விசாரணையை அக்டோபர் 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments