சுத்திகரிப்பு செய்யாத சாயக்கழிவு நீரை காவிரி ஆற்றில் விடுவதாக 16 சாய ஆலைகளுக்கு சீல் வைப்பு

0 968
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில், சாயக்கழிவு நீரை காவிரி ஆற்றில் திறந்துவிட்ட 16 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில், சாயக்கழிவு நீரை காவிரி ஆற்றில் திறந்துவிட்ட 16 ஆலைகளுக்கு  சீல் வைக்கப்பட்டுள்ளது.

பள்ளிப்பாளையத்தில் உள்ள சாயக்கழிவு ஆலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு நீரை காவிரி ஆற்றில் திறந்துவிடுவதாக வந்த புகாரில் நாமக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மு.ஜெயக்குமார், பறக்கும் படை பொறியாளர் மணிகண்டன் மற்றும் குழுவினர், இந்தப் பகுதியில்  உள்ள 48 சாய ஆலைகளில், கடந்த 3 நாள்களாக கள ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் 16 ஆலைகள் விதிமீறல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு, ஆலைகளில் இருந்த சாயமிடும் எந்திரங்களுக்கு தனித்தனியாக சீல் வைக்கப்பட்டதோடு, ஆலையின் கதவுகளும் சீலிடப்பட்டன. மேலும் சாய ஆலை உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments