மின்னுவதெல்லாம் பொன் அல்ல.. நகைக் கடனில் நூதன மோசடி..!

0 7365
சென்னையின் ஒரு வங்கி கிளையில் கவரிங் நகைகளை, தங்க நகைகள் என கூறி, அட மானம் வைத்து, நூதன முறையில் ஒரு கோடியே 2 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டு உள்ளது. இந்த மோசடி தொடர்பாக நகை மதிப்பீட்டாளரும், ஒரு போலீஸ்காரரின் மனைவியும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னையின் ஒரு வங்கி கிளையில் கவரிங் நகைகளை, தங்க நகைகள் என கூறி, அட மானம் வைத்து, நூதன முறையில் ஒரு கோடியே 2 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டு உள்ளது. இந்த மோசடி தொடர்பாக நகை மதிப்பீட்டாளரும், ஒரு போலீஸ்காரரின் மனைவியும் கைது செய்யப்பட்டு உள்ளனர். 

வேலியே பயிரை மேய்ந்த கதையாக வங்கி கிளையில் நகைகளை பாதுகாக்க வேண்டிய நகை மதிப்பீட்டாளரே, மோசடிக்கு மூளையாக செயல்பட்ட சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. சென்னை - அண்ணாசாலை கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டு, தற்போது சிண்டிகேட் வங்கியாக செயல்பட்டு வரும் நந்தனம் கிளையில் இந்த மோசடி சம்பவம் அரங்கேறி உள்ளது.

இங்கு, நகை மதிப்பீட்டாளராக திருவல்லிக்கேணி முரளி என்பவர் பணியாற்றி வந்தார். தங்க நகைக் கடன்திட்டத்தின்மூலம் முரளி, 101 முறை போலி வாடிக்கையாளர்களிடம் கவரிங் நகைகளை வாங் கிக் கொண்டு, ஒரு கோடியே 2 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கியிருந்தது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி விசாரணையில் முரளி, தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களை போலி வாடிக்கையாளர்களாக உருவாக்கி, இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக, போலி வாடிக்கையாளர்களுக்கு முரளி, கமிஷன்வழங்கி இருந்ததும் தெரிய வந்துள்ளது.

101 முறை அரங்கேற்றிய இந்த மோசடியில் ஐஸ் ஹவுஸ் சாந்தி என்ற பெண் பெயரில் மட்டும் 37 முறை போலி நகைகளுக்கு முரளி கடன் வழங்கி உள்ளார். இந்த சாந்தி, ஒரு போலீஸ்காரரின் மனைவி என விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில், திருவல்லிக்கேணி முரளி, அவரது கூட்டாளி ஐஸ் ஹவுஸ் சாந்தி இருவரையும் கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், மோசடியில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments