இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் 95,735 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 1483
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் 95 ஆயிரத்து 735 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 95 ஆயிரத்து 735 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் 95 ஆயிரத்து 735 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 95 ஆயிரத்து 735 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால்  பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 44 லட்சத்து 65 ஆயிரமாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனாவால் ஆயிரத்து 172 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 72 ஆயிரத்து 939 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 9 லட்சத்து 19 ஆயிரம் பேர் கொரோனா நோயாளிகளாக உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 77 புள்ளி 7 விழுக்காடாக உயர்ந்துள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு விகிதம் ஒன்று புள்ளி ஆறு விழுக்காடாகக் குறைந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments