'என்னை பத்தி எதுவும் தப்பா சொல்லிடாதீங்க!' அக்கம்பக்கத்தாரிடம் கெஞ்சிய சஞ்சனா கல்ராணி

0 7610

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சனா கல்ராணி டாக்டர் ஒருவருடன் லிவிங் டுகெதராக வாழ்ந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கன்னட நடிகை சஞ்சனா கல்ராணியை போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு இந்திராநகரில் உள்ள சஞ்சனா வீட்டில் சொத்து ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்தனர். அவர் தங்கியிருந்த வீடு மற்றும் வைத்திருந்த பி.எம்.டபிள்யூ கார் சஞ்சனாவின் வருமானத்தில் வாங்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.  சஞ்சனாவிடம் விசாரித்தபோது தனது நண்பரான டாக்டர் ஆஷிஸ் என்பவர் வாங்கி கொடுத்ததாக கூறினார் .

சஞ்சனாவும் டாக்டர் . ஆஷிசும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். டாக்டர் ஆஷிஸ் அடிக்கடி சஞ்சனாவின் வீட்டிற்கு வந்து மது விருந்தில் கலந்து கொண்டுள்ளார் . சஞ்சனாவின் குடும்பத்தினருக்கும் டாக்டருடன் அறிமுகம் இருந்துள்ளது. . வீட்டை சஞ்சனாவின் பெயரிலும் , காரை கே.ஆர்புரம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் சஞ்சனாவின் மற்றொரு பெயரான அர்ச்சனா கல்ராணி பெயரிலும் டாக்டர் பதிவு செய்து கொடுத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.image

மதுபான விருந்துககளின் போது அதிகளவில் மது அருந்திவிட்டு , போதையில் அக்கம் பக்கத்தினரிடம் சஞ்சனா தகராறில் ஈடுபடுவது வழக்கமாக இருந்துள்ளது. இதனால்,அக்கம் பக்கத்தினர் சஞ்சனாவின் மீது மிகவும் கோபத்தில் இருந்துள்ளனர் . போதை பொருள் பழக்கம் காரணமாக போலீஸார் விசாரணைக்கு வருவார்கள் என்பதை முன் கூட்டியே தெரிந்து கொண்ட சஞ்சனா, 2 , 3 நாட்களுக்கு முன்பு அக்கம் பக்கத்தினரிடம் . 'போலீசார் என்னை குறித்து கேட்டால் எதுவும் தப்பாக கூறி விடாதீர்கள்' என்று கெஞ்சியுள்ளார் .

முன்னதாக தனது செல்போனில் இருந்து அனைத்து போட்டோக்கள் , வீடியோக்களை அழித்த அவர் , வெளிமாநிலம் , வெளி நாடுகள் சென்று வந்த விமான டிக்கெட் , விருந்து நிகழ்ச்சி தொடர்பான அனைத்து ஆவணங்களை கிழித்துள்ளார். அதோடு, மதுபானம் அருந்தினால் , ரத்த பரிசோதனையில் தெரிந்துவிடும் என்பதாலும் தனக்கு மது பழக்கம் உண்டு என்பதை போலீஸார் கண்டுபிடித்து விடுவார்கள் என்றும் கருதி கைது செய்யப்படுவதற்கு சில நாள்கள் மது அருந்தாமல் சஞ்சனா இருந்துள்ளார்.

போதை பொருள் புழக்கம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ராகிணி திவேதியும் , சஞ்சனா கல்ராணியும் மடிவாளாவில் உள்ள மகளிர் கைதிகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இருவரையும் தலா 5 நாள்கள் காவலில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் 24 முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக நடிகைகள் ராகிணி- சஞ்சனா ஆகியோர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments