புளியந்தோப்பில் பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை

0 3650
சென்னையில் ரவுடி 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தது.. புளியந்தோப்பு டிம்லஸ் சாலையை சேர்ந்த ரமேஷ் என்கிற நாய் ரமேஷ் , பேசின்பிரிட்ஜ் குருசாமி நகர் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிவந்து வந்த 5 பேர் ரமேஷை வழிமறித்ததுடன் ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த ரவுடி ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். கொல்லப்பட்ட ரமேஷ் மீது 2016ம் ஆண்டு ரவுடி சிவராஜை என்பவரை வெட்டிக் கொலை செய்த வழக்கு உட்பட 7 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ரவுடி சிவராஜின் கூட்டாளிகளான விஜி என்கிற விஜயக்குமார், கார்டன் சரத் உட்பட 5 பேர் முன்பகை காரணமாக இந்த கொலையை செய்ததாக தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments