மக்களவைத் துணைத் தலைவர் தேர்தலை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்

0 748
மக்களவைத் துணைத் தலைவர் தேர்தலை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் மக்களவைத் துணைத் தலைவர் தேர்தலை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டு ஓராண்டுக்கு மேலாகி விட்ட நிலையில் இன்னும் துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 14ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் மக்களவை காங்கிரஸ் தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவைத் தலைவரான ஓம் பிர்லாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் மக்களவைத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்காமல் ஓராண்டு கடந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மழைக்காலக் கூட்டத் தொடரில் மக்களவைத் தலைவர் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments