மும்பை வந்த நடிகை கங்கணா ரணாவத்துக்கு எதிராக சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

0 1255
மும்பை விமான நிலையம் வந்த நடிகை கங்கணா ரணாவத்தை கண்டித்து, சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பை விமான நிலையம் வந்த நடிகை கங்கணா ரணாவத்தை கண்டித்து, சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் கங்கனா ஒப்பிட்டுப் பேசியதால், ஆளும் சிவசேனா கட்சியுடன் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இமாச்சலப் பிரதேச மாநிலம் மணாலியில் இருந்து, கங்கணா ரணாவத் மும்பை விமான நிலையம் வந்தார். அப்போது அவருக்கு எதிராக சிவசேனா கட்சியினர் ஏராளமானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கங்கணாவுக்கு எதிராக பதாகைகள் ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதனிடையே மும்பையில் கங்கணா ரணாவத்தின் பங்களா முறைகேடாக கட்டப்பட்டுள்ளதாக கூறி, மாநராட்சி நிர்வாகம் இடிக்கும் பணியில் ஈடுபட்டதற்கு, மும்பை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இது தொடர்பாக மாகராட்சி நிர்வாகம் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே தனது வீடு இடிக்கப்பட்டது தொடர்பான வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டுள் கங்கணா, இது ஜனநாயகத்தின் மரணம் என்று சாடியிருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments