ரிலையன்சில் ரூ. 7,500 கோடி முதலீடு செய்ய அமெரிக்காவின் சில்வர் லேக் முடிவு

0 951
அமெரிக்க தனியார் பங்கு வர்த்தக நிறுவமான சில்வர் லேக், ரிலையன்ஸ் ரீடெய்ல் வெஞ்சர்ஸ் நிறுவனத்தில் 7,500 கோடி ரூபாய் முதலீடு செய்து, 1 புள்ளி 75 சதவிகித பங்குகளை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க தனியார் பங்கு வர்த்தக நிறுவமான சில்வர் லேக், ரிலையன்ஸ் ரீடெய்ல் வெஞ்சர்ஸ் நிறுவனத்தில் 7,500 கோடி ரூபாய் முதலீடு செய்து, 1 புள்ளி 75 சதவிகித பங்குகளை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது ரிலையன்சில் சில்வர் லேக் நடத்தும் இரண்டாவது முதலீடு ஆகும். இந்த ஆண்டு துவக்கத்தில் ஜியோ-வில் சில்வர் லேக் நிறுவனம் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்தது.

இந்த முதலீடு குறித்து கருத்து தெரிவித்துள்ள ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, சில்லறை வர்த்தகத்தில் இந்திய நுகர்வோருக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில்,  லட்சக்கணக்கான சிறு வியாபாரிகளை ஒருங்கிணைக்கும் தமது முயற்சிக்கு சில்வர் லேக்கின் முதலீடு உதவிகரமாக இருக்கும் என கூறியுள்ளார். 

சில்வர் லேக்கின் முதலீட்டையும் சேர்த்து ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகப் பிரிவின் முதலீட்டு மதிப்பு 4 லட்சத்து 21 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments