6 மாதங்களாக நிறுத்தப்பட்ட பரங்கிமலை - சென்ட்ரல் இடையிலான மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

0 537
பரங்கிமலை- சென்னை சென்ட்ரல் இடையிலான மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

பரங்கிமலை- சென்னை சென்ட்ரல் இடையிலான மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக சுமார் 6 மாதங்களாக நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை, முதற்கட்டமாக கடந்த 7-ம் தேதி முதல் விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. .

இந்த நிலையில், இன்று முதல் பரங்கிமலையில் இருந்து கோயம்பேடு வழியாக சென்ட்ரலுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

பயணிகள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம், சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரை செல்லும்  மெட்ரோ சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments