ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் தப்பிய துணை அதிபர்

0 482
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் தப்பிய துணை அதிபர்

 

ஆப்கானிஸ்தானில் சாலையோர குண்டுவெடிப்பில்  அந்நாட்டு துணை அதிபர் அம்ருல்லா சலே (Amrullah Saleh) லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

உளவுப்படை முன்னாள் தலைவரான அவர் ஏற்கெனவே பல முறை  தாக்குதல்களில் இருந்து தப்பியுள்ளார்.

இதில் கடந்த ஆண்டு  20 பேர் பலியான தாக்குதலும் அடங்கும்.  இந்நிலையில் சலே காரை குறிவைத்து சாலையோரத்தில் வெடிகுண்டை மறைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் அப்பாவி மக்கள் 10 பேர் பலியான நிலையில், மேலும் 15 பேர் காயமடைந்தனர். முகம், கையில் லேசான காயத்துடன் சலே தப்பினார்.

இந்த தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் தங்களுக்கு தொடர்பில்லை என  தலிபான் அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments