ஸ்விட்சர்லாந்தில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட நீளமான சுரங்க ரயில் பாதை திறப்பு

0 774
ஸ்விட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள சுரங்க ரயில் பாதை திறக்கப்பட்டது.

ஸ்விட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள சுரங்க ரயில் பாதை திறக்கப்பட்டது.

செனரி பேஸ் டன்னல் என்று அழைக்கப்படும் இந்தப் பாதை அமைக்க கடந்த 1992ம் ஆண்டு திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. சுமார் 25 மைல் நீளம் கொண்ட இந்த சுரங்கப் பாதையில் வரும் டிசம்பர் மாதம் ரயில் போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு 250 மைல் நீளமுள்ள எஃகு பயன்படுத்தப்பட்டுள்ளது. 11 பில்லியன் டாலர் மதிப்பில் ஆல்பைன் சிகரங்களுக்கு கீழே கட்டமைக்கப்பட்டுள்ள இந்தச் சுரங்கம் 32 அடி விட்டம் கொண்டது என்பதும் இதற்காக 30 மில்லியன் டன் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments