இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலிய அணி வெற்றி

0 1171
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலிய அணி வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டீ-ட்வெண்டி கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சவுதாம்ப்டனில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ (Bairstow) 55 ரன்களை குவிக்க, ஜோ டென்லி 29 ரன்களை சேர்த்தார்.

சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்ததோடு, பின்கள வீரர்களின் நிதானமான ஆட்டத்தால், அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவால் 145 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.

தொடர்ந்து, களமிறங்கி ஆஸ்திரேலிய அணி வீரர்கள், பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தனர்.

பின்ச் மற்றும் மார்ஷ் தலா 39 ரன்களைச் சேர்க்க, அந்த அணி 3 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டி தொடரில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது. 2-1 என இங்கிலாந்து தொடரை கைப்பற்ற, ஜாஸ் பட்லர் தொடர் நாயகன் விருதைக் கைப்பற்றினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments