உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 லட்சமாக உயர்வு

0 551
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 லட்சமாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தைக் கடந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு புதிதாகத் தொற்று ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 77 லட்சமாக உயந்துள்ளது.

ஒருநாள் பாதிப்பிலும், உயிரிழப்பிலும் உலகிலேயே இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 89 ஆயிரத்து 852 பேர் பாதிக்கப்பட்டும், ஆயிரத்து 107 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

இதனிடையே இந்தியாவில் இதுவரை 5 கோடி பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக 10 நாட்களில் ஒரு கோடி பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐ சி எம் ஆர் தெரிவித்துள்ளது.

இதுவரை அதிக பாதிப்புகளைச் சந்தித்து வந்த அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பின் தாக்கம் பெருமளவு குறைந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் உலக நாடுகளில் கொரோனா நோயால் 4 ஆயிரத்து 289 பேர் உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments