லாடக் எல்லையில் இருநாட்டு படைகள் இடையே மோதல்... சீன ராணுவத்தை தடுத்து நிறுத்திய இந்திய ராணுவம்...

0 4513
லாடக் எல்லையில் இருநாட்டு படைகள் இடையே மோதல்... சீன ராணுவத்தை தடுத்து நிறுத்திய இந்திய ராணுவம்...

லடாக் எல்லையில்  ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சீன ராணுவத்தை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இருநாட்டு படைகள் இடையே மீண்டும் மோதல் மூண்டதால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது...

கால்வன் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் மாதம் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து இருதரப்பிலும் படைகளை விலக்குவதற்கும், பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில், திங்களன்று இரவு மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய ராணுவம் அளித்துள்ள விளக்கத்தில், சீனப் படையினர் இந்திய நிலைகளை நோக்கி நெருங்கி வர முயன்றதாகவும், இந்திய வீரர்கள் அந்த முயற்சியை தடுத்தபோது, அச்சுறுத்தும் வகையில் சீன வீரர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவித்துள்ளது.

எந்த ஒரு நிலையிலும் இந்திய ராணுவம் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் அத்துமீறியது இல்லை என்றும், துப்பாக்கியால் சுடுவது உள்ளிட்ட ஆக்கிரமிப்பு செயல்களில் ஈடுபட்டதில்லை என்றும் இந்திய ராணுவம் கூறியுள்ளது.

சீனா மிக மோசமான ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதும் இந்திய வீரர்கள் கட்டுப்பாட்டுடனும், முதிர்ச்சியுடனும், பொறுப்புடனும் நடந்து கொண்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, பீஜிங்கில் பேசிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜவோ லிஜியான், இந்திய வீரர்கள் சட்டவிரோதமாக எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி வந்து, பாங்காங் சோ ஏரியின் தெற்கு கரைப்பகுதியில் நுழைந்ததாக கூறினார்.

எல்லையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சீன வீரர்களை எச்சரிக்கும் விதமாக இந்திய வீரர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

நிலைமையைச் சமாளிக்கும் விதமான நடவடிக்கைகள் எடுக்க சீன வீரர்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அத்துமீறி நுழைந்த இந்திய வீரர்கள் மீண்டும் திரும்பிச் செல்ல பேச்சுவார்த்தையில் வலியுறுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments